poem 31 · Akananuru · Many poets

அகநானூறு 31 · பாலை · மாமுலனார்

நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம்புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கிநிலம்புடை பெயர்வ தன்றுகொ லின்றெனமன்னுயிர் மடிந்த மழைமா றமையத்திலையில வோங்கிய நிலையுயிர் யாஅத்துமேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக்கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிடநிணம்வரிக் குறைந்த நிறத்த வதர்தொறுங்கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்னபுண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்கண்ணுமிழ் கழுகின் கான நீந்திச்சென்றொ ரன்பிலர் தோழி வென்றியொடுவில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்தமிழ்கெழு மூவர் காக்குமொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே.
Share
கதை

பாலை · மாமுலனார்

பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு · மாமுலனார் பாடியது