குறிஞ்சி · நல்வெள்ளியார்.1
(1) பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழிதலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம். · நல்வெள்ளியார்.1 பாடியது
நெருந லெல்லை யேனற் றோன்றித்திருமணி யொளிர்வரும் பூணன் வந்துபுரவலன் போலுந் தோற்ற முறழ்கொளவிரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்குளிர்கொ டட்டை மதனில புடையாச்சூரர மகளிரி னின்ற நீமற்றியாரை யோவெம் மணங்கியோ யுண்கெனச்சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்னுள்ளவ னறித லஞ்சி யுள்ளில்கடிய கூறிக் கைபிணி விடாஅவெரூஉமான் பிணையி னொரீஇ நின்றவென்னுரத் தகைமையிற் பெயர்த்துப்பிறி தென்வயிற்சொல்ல வல்லிற்று மிலனே யல்லாந்தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்றுந்தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோசாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கேமாசின் றாதலு மறியா னேசற்றென்குறைப் புறனிலை முயலுமண்க ணாளனை நகுகம் யாமே.
(1) பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழிதலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம். · நல்வெள்ளியார்.1 பாடியது