poem 29 · Akananuru · Many poets

அகநானூறு 29 · பாலை · வெள்ளாடியனார் 1

தொடங்குவினை தவிரா வசைவி னோன்றாட்கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின்வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்ததாழ்வி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச்செய்வினைக் ககன்ற காலை யெஃகுற்றிருவே றாகிய தெரிதகு வனப்பின்மாவி னறுவடி போலக் காண்டொறுமேவ றண்டா மகிழ்நோக் குண்கணினையாது கழிந்த வைக லெனையதூஉம்வாழலென் யானெனத் தேற்றிப் பன்மாண்டாழக் கூறிய தகைசா னன்மொழிமறந்தனிர் போறி ரெம்மெனச் சிறந்தநின்னெயிறுகெழு துவர்வா யின்னகை யழுங்கவினவ லானாப் புனையிழை கேளினிவெம்மை தண்டா வெரியுகு பறந்தலைக்கொம்மை வாடிய வியவுள் யானைநீர்மருங் கறியாது தேர்மருங் கோடியறுநீ ரம்பியி னெறிமுத லுணங்குமுள்ளுநர்ப் பனிக்கு மூக்கருங் கடத்திடைஎள்ள னோனாப் பொருடரல் விருப்பொடுநாணுத்தளை யாக வைகி மாண்வினைக்குடம்பாண் டொழிந்தமை யல்லதைமடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே.
Share
கதை

பாலை · வெள்ளாடியனார் 1

வினைமுற்றி மீண்ட தலைமகன் எம்மையும் நினைத்தறிதிரோ? என்ற தலைமகட்குச் சொல்லியது. · வெள்ளாடியனார் 1 பாடியது