பாலை · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது
வினைநன் றாதல் வெறுப்பக் காட்டிமனைமாண் கற்பின் வாணுத லொழியக்கவைமுறி யிழந்த செந்நிலை யாஅத்தொன்றோங் குயர்சினை யிருந்த வன்பறைவீளைப் பருந்தின் கோள்வல் சேவல் (5)வளைவாய்ப் பேடை வருதிறம் பயிருமிளிதேர் தீங்குர லிசைக்கு மத்தஞ்செலவருங் குரைய வென்னாது சென்றவண்மலர்பா டான்ற மையெழின் மழைக்கண்டெளியா நோக்க முள்ளினை யுளிவாய் (10)வெம்பர லதர குன்றுபல நீந்தியாமே யெமிய மாக நீயேயொழியச் சூழ்ந்தனை யாயின் முனாஅதுவெல்போர் வானவன் கொல்லி மீமிசைநுணங்கமை புரையும் வணங்கிறைப் பணைத்தோள் (15)வரியணி யல்குல் வாலெயிற் றோள்வயிற்பிரியா யாயின் நன்றுமற் றில்லவன்றுநம் மறியா யாயினு மின்றுநஞ்செய்வினை யாற்றுற விலங்கினெய்துவை யல்லையோ பிறர்நகு பொருளே. (20)
தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது