poem 126 · Akananuru · Many poets

அகநானூறு 126 · மருதம் · நக்கீரர்

நின்வாய் செத்து நீபல உள்ளிபெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்றுஅறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்கமாலிருள் நடுநாள் போகித் தன்ஐயர்காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்குஅவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்கழங்குறடு முத்தமொழ் நன்கலம் பெறூஉம்பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்விநயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்திதியனொடு பொருத அன்னி போலவிளி கவை கொல்லோ நீயே கிளியெனச்சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரியகயலென அமர்த்த உண்கண் புயலெனப்புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்மின்னேர் மருங்குல் குறுமகள்பின்னிலே விடாஅ மடங்கெழு நெஞ்சே.
Share
கதை

மருதம் · நக்கீரர்

(1) உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. <br>
(2) அல்ல குறிப்பட் டழிந்ததுமாம். <br>
(3) தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதுமாம். · நக்கீரர் பாடியது