பாலை · பரணர்
2தலைமகன் வினைமுற்றி மீண்டமை யுணர்ந்த தோழி தலைமகட்கச் சொல்லியது. · பரணர் பாடியது
அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழநிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டிஇரங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கைஆலி அன்ன வால்வீ தாஅய்வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத்தாதுறு குவளைப் போதுபிணி அவிழப்படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்கடாஅம் மாறிய யானை போலப்பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூமைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்பனியடூஉ நின்ற பானாள் கங்குல்தமியோர் மதுகை தூக்காய் தண்ணெனமுனிய அலைத்தி முரணில் காலைக்கைதொழு மரபில் கடவுள் சான்றசெய்வினை மருங்கில் சென்றோர் வல்வரின்விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறத்தபெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்சூடா வாகைப் பறந்தலை ஆடுபெறஒன்பது குடையும் நன்பகல் ஒழித்தபீடில் மன்னர்போலஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.
Arampoazh avvalai thoalnilai nekizha / Nirampaa vaazhkkai naerthal vaenti / Irangkaazh anna arumpumuthir eengkai / Aali anna vaalvee thaaay / Vaivaal oathi maiyanal aeyppath / Thaathuru kuvalaip poathupini avizhap / Pataaap paingkan paavatik kayavaayk / Kataaam maariya yaanai poalap / Peythuvari thaakiya pongkuselar konmoo / Maithoay visumpin maathiraththu uzhitharap / Paniyatoou ninra paanaal kangkul / Thamiyoar mathukai thookkaay thannena / Muniya alaiththi muranil kaalaik / Kaithozhu marapil katavul saanra / Seyvinai marungkil senroar valvarin / Viriyulaip polintha pariyutai nanmaan / Veruvaru thaanaiyotu vaentupulath thiraththa / Peruvalak karikaal munnilais sellaar / Sootaa vaakaip paranthalai aatupera / Onpathu kutaiyum nanpakal ozhiththa / Peetil mannarpoala / Oatuvai mannaal vaatainee yemakkae.
2தலைமகன் வினைமுற்றி மீண்டமை யுணர்ந்த தோழி தலைமகட்கச் சொல்லியது. · பரணர் பாடியது