நெய்தல் · நக்கீரனார்
தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து · நக்கீரனார் பாடியது
நெடுவேள் மார்பின் ஆரம் போலச்செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்பைங்காற் கொக்கின் நிரைபறை யுகப்பஎல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறுமதரெழில் மழைக்கண் கலுழ இவளேபெருநாண் அணிந்த சிறுமென் சாயல்மாணலம் சிதைய ஏங்கி யானாதுஅழல்தொடங் கினளே பெரும அதனால்கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரிநெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇவல்வில் இளையரொ டெல்லிச் செல்லாதுசேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோபெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பைஅன்றில் அகவும் ஆங்கண்சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே.
தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து · நக்கீரனார் பாடியது