poem 117 · Akananuru · Many poets

அகநானூறு 117 · பாலை

மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர்வி(னை)வளங்கெழு திருநகர் புலம்பப் போகிவெருவரு கவலை ஆங்கண் அருள்வரக்கருங்கால் ஓமை யேறி வெண்டலைப்பருந்துபெடை பயிரும் பாழ்நாட் டாங்கண்பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கேசாந்துளர் வணர்குரல் வாரி வகைவகுத்துயான்போது துணைப்பத் தகரம் மண்ணாள்தன்னோ ரன்ன தகைவெங் காதலன்வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்நெடுங்கால் மாஅத் தூழுறு வெண்பழம்கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்வாணன் சிறுகுடி வடாஅதுதீநீர்க் கான்யாற்று அவிரறல் போன்றே.குறிப்பு:- (ஆசிரியர் பெயர் காணப் படவில்லை)
Share
கதை

பாலை

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.