poem 192 · Akananuru · Many poets

அகநானூறு 192 · குறிஞ்சி · 5பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

மதியரும் பன்ன மாசறு சுடர்நுதல்பொன்னேர் வண்ணம் கொண்டன்று அன்னோயாங்கா குவள்கொல் தானே விசும்பின்எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்செவ்வாய்ச் சிறுகிளி சிதைய வாங்கிப்பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல்வளைசிறை வாரணங் கிளையொடு கவரஏனலும் 3இறங்குபொறை உயிர்த்தன பால்நாள்நீவந் தளிக்குவை யெனினே மால்வரைமைபடு 4விடரகந் துழைஇ ஒய்யெனஅருவி தந்த அரவுமிழ் திருமணிபெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்இரவும் இழந்தனள் அளியள் உரவுப்பெயல்பெருமலை நாடநின் மலர்ந்த மார்பே.

Mathiyarum panna maasaru sutarnuthal / Ponnaer vannam kontanru annoa / Yaangkaa kuvalkol thaanae visumpin / Eyyaa varivil anna painthaars / Sevvaays sirukili sithaiya vaangkip / Poraimelin thitta punpurap perungkural / Valaisirai vaaranang kilaiyotu kavara / Aenalum 3irangkuporai uyirththana paalnaal / Neevan thalikkuvai yeninae maalvarai / Maipatu 4vitarakan thuzhaii oyyena / Aruvi thantha aravumizh thirumani / Peruvarais sirukuti marukuvilak kuruththalin / Iravum izhanthanal aliyal uravuppeyal / Perumalai naatanin malarntha maarpae.

Share
கதை

குறிஞ்சி · 5பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

தோழி, தலைமகனைச் 1செறிப்புஅறிவுறீஇ இரவுக்குறி மறுத்தது. · 5பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் பாடியது