பாலை · 4ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. · 4ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடியது
அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீஎரியிதழ் அலரியொடு இடைபட விரைஇவெண்தாட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணித்தோல்புதைச் சிரற்றடிக் கோலுடை உமணர்ஊர்கண் டன்ன ஆரம் வாங்கிஅருஞ்சுரம் இவர்ந்த அசைவில் நோன்தாள்திருந்துபகட் டியம்பும் கொடுமணி புரிந்தவர்மடிவிடு வீளையொடு கடிதெதி ரோடிஓமையம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்குஏமஞ் செப்பும் என்றூழ் நீளிடைஅரும்பொருள் நசைஇப் பிரிந்துறை 2வல்லிசென்றுவினை எண்ணுதி யாயின் நன்றும்முல்லை அருந்தும் மெல்லிய வாகிஅறலென விரிந்த உறலின் சாயல்ஒலியிருங் கூந்தல் தேறுமெனவலிய கூறவும் வல்லையோ மற்றே.
Aththap paathirith thuyththalaip puthuvee / Eriyithazh alariyotu itaipata viraii / Venthaattuth thotuththa vantupatu kannith / Thoalputhais sirarratik koalutai umanar / Oorkan tanna aaram vaangki / Arunjuram ivarntha asaivil noanthaal / Thirunthupakat tiyampum kotumani purinthavar / Mativitu veelaiyotu katithethi roati / Oamaiyam perungkaattu varooum vampalarkku / Aemanj seppum enroozh neelitai / Arumporul nasaiip pirinthurai 2valli / Senruvinai ennuthi yaayin nanrum / Mullai arunthum melliya vaaki / Aralena virintha uralin saayal / Oliyirung koonthal thaerumena / Valiya kooravum vallaiyoa marrae.
தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. · 4ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடியது