poem 233 · Akananuru · Many poets

அகநானூறு 233 · பாலை · — மாமூலனார்

அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநின்அலர்முலை நனைய அழாஅல் தோழிஎரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலம்பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தெனஊனில் யானை உயங்கும் வேனில்மறப்படைக் குதிரை மாறா மைந்தின்துறக்கம் எய்திய தொய்யா நல்லிசைமுதியர்ப் பேணிய உதியஞ் சேரல்பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல்கூளிச் சுற்றம் குழீஇருந் தாங்குக்குறியவும் நெடியவுங் குன்றுதலை மணந்தசுரனிறந் தகன்றன ராயினும் மிகநனிமடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅப்பொருள்வயின் நீடலோ இலர்நின்இருளைங் கூந்தல் இன்துயின் மறந்தே.

Alamaral mazhaikkan malkupani vaaranin / Alarmulai nanaiya azhaaal thoazhi / Erikavarpu unta karipurap perunilam / Peetukezhu marungkin oatumazhai thuranthena / Oonil yaanai uyangkum vaenil / Marappataik kuthirai maaraa mainthin / Thurakkam eythiya thoyyaa nallisai / Muthiyarp paeniya uthiyanj saeral / Perunjoaru kotuththa njaanrai irumpal / Koolis surram kuzheeirun thaangkuk / Kuriyavum netiyavung kunruthalai manantha / Suraniran thakanrana raayinum mikanani / Matangkaa ullamotu mathimayak kuraaap / Porulvayin neetaloa ilarnin / Irulaing koonthal inthuyin maranthae.

Share
கதை

பாலை · -- மாமூலனார்

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. · -- மாமூலனார் பாடியது