குறிஞ்சி · பரணர்
இரவுக்குறி வந்துநீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · பரணர் பாடியது
இலமலர் அன்ன அஞ்செந் நாவிற்புலமீக் கூறும் புரையோர் ஏத்தப்பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்பொறையன் கடுங்கோப் பாடிச் சென்றகுறையோர் கொள்கலம் போல நன்றும்முறையின் வழாஅது ஆற்றிப் பெற்றகறைய டி யானை நன்னன் பாழிஊட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலிபுள்ளிற் கேம மாகிய பெரும்பெயர்வெள்ளத் தானை 3அதிகற் கொன்றுவந்துஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பிற்பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பயநீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்குறையறல் அன்ன இரும்பல் கூந்தல்இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக்கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்துஇயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்துபெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதைஇயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத்தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.
இரவுக்குறி வந்துநீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · பரணர் பாடியது