பாலை · ஆலம்பேரி சாத்தனார்
பொருள்வயிற் பிரியக்கருதிய தலைகனைத் தோழி தலைமகளது ஆற்றாமை கண்டுசெலவழுங்குவித்தது. · ஆலம்பேரி சாத்தனார் பாடியது
செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக்காடு3கவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்நீடுசினை வறிய வாக ஒல்லெனவாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்தேக்கமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபுமுளிஅரில் பிறந்த வளிவளர் கூர்எரிச்சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்வெம்மலை அருஞ்சுரம் நீந்தி ஐயசேறும் என்ற சிறுசொற் கிவட்கேவசையில் வெம்போர் வானவன் மறவன்நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன்மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்அகலறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்ததண்கமழ் நீலம் போலக்கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே.
பொருள்வயிற் பிரியக்கருதிய தலைகனைத் தோழி தலைமகளது ஆற்றாமை கண்டுசெலவழுங்குவித்தது. · ஆலம்பேரி சாத்தனார் பாடியது