poem 134 · Akananuru · Many poets

அகநானூறு 134 · முல்லை · சீத்தலைச் சாத்தனார்

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தெனமணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்செம்புற மூதாய் பரத்தலின் நன்பலமுல்லை வீகழல் தாஅய் வல்லோன்செய்கை அன்ன செந்நிலப் புறவின்வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்கஇடிமறந் தேமதி வலவ குவிமுகைவாழை வான்பூ ஊழுறு புதிர்ந்தஒழிகுலை யன்ன திரிமருப் பேற்றொடுகணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலைகடுமான் தேரொலி கேட்பின்நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே.
Share
கதை

முல்லை · சீத்தலைச் சாத்தனார்

வினை முற்றி மீண்டதலைமகன் பாகற் குரைத்தது. · சீத்தலைச் சாத்தனார் பாடியது