பாலை · உறையூர் மருத்துவன் தாமோதரனார்
பிரிவிடையாற்றாளாயினாளெனக் கவன்ற தோழிக்குத்தலைமகள் ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது. · உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது
குன்றி அன்ன கண்ண குரூஉமயிர்புன்தாள் வெள்எலி மோவாய் ஏற்றைசெம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழிநல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பகார்தலை மணந்த பைம்புதல் புறவின்வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடுஎரிபரந் தன்ன இலமலர் விரைஇப்பூங்கலுழ் சுமந்த தீம்புனல் கான்யாற்றுவான்கொள் தூவல் வளிதர உண்கும்எம்மொடு வருதல் வல்லையோ மற்றெனக்கொன்ஒன்று வினவினர் மன்னே தோழிஇதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சிகொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅம்மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவல் கலித்தவரிமரல் கறிக்கும் மடப்பிணைத்திரிமருப்பு இரலைய காடிறந் தோரே.
பிரிவிடையாற்றாளாயினாளெனக் கவன்ற தோழிக்குத்தலைமகள் ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது. · உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது