poem 132 · Akananuru · Many poets

அகநானூறு 132 · குறிஞ்சி · தாயங் கண்ணனார்

ஏனலும் இறங்குகுரல் இறுத்தன நோய்மலிந்துஆய்கவின் தொலைந்தஇவள் நுதலும் நோக்கிஏதில மொழியும்இவ் வூரு மாகலிற்களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழிவால்நிணப் புகவிற் கானவர் தங்கைஅம்பணை மென்தோள் ஆயிதழ் மழைக்கண்ஒல்கியல் கொடிச்சியை நல்கினை யாயிற்கொண்டனை சென்மோ நுண்பூண் மார்பதுளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவைவேங்கை விரியிணர் ஊதிக் காந்தள்தேனுடைக் குவிகுலைத் துஞ்சி யானைஇருங்கவுள் கடாஅம் கனவும்பெருங்கல் வேலிநும் உறைவின் ஊர்க்கே.
Share
கதை

குறிஞ்சி · தாயங் கண்ணனார்

தோழி தலைமகளைஇடத்துய்த்துவந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்றுவரைவுகடாயது. · தாயங் கண்ணனார் பாடியது