மருதம் · விற்றூற்று மூதெயினனார்
உணர்ப்புவயின் வாராஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · விற்றூற்று மூதெயினனார் பாடியது
மைப்பறப் 3புழுக்கின் நெய்க்கனி வெண்சோறுவரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளிஅங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்படுமண முழவொடு பரூஉப்பணை இமிழவதுவை மண்ணிய மகளிர் 5விதுப்புற்றுப்பூக்கணும் இமையார் நோக்குபு மறையமென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலைபழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்றமண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டித்தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றிமழைபட் டன்ன மணன்மலி பந்தர்இழையணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்பெரும்புழுக்கு உற்றநின் பிறை 6நுதல் பொறிவியர்ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்மறைதிறன் அறியா ளாகி ஒய்யெனநாணினள் இறைஞ்சி யோளே பேணிப்பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச்சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்தஇரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.
உணர்ப்புவயின் வாராஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · விற்றூற்று மூதெயினனார் பாடியது