குறிஞ்சி · மதுரைக் கணக்காயனார்
அல்ல குறிப்பிட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைக் கணக்காயனார் பாடியது
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான்கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅதுவெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதைமண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்ஏவல் இளையர் தலைவன் மேவார்அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப்பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைகெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅநீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்வரையர மகளிரின் அரியள்அவ்வரி அல்குல் அணையாக் காலே.
அல்ல குறிப்பிட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைக் கணக்காயனார் பாடியது