குறிஞ்சி · பரணர்
இரவுக்குறிக்கண்தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லியது. · பரணர் பாடியது
கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்துஅளப்பரி தாகிய குவையிருந் தோன்றலகடல்கண் டன்ன மாக விசும்பின்அழற்கொடி யன்ன மின்னுவசிபு நுடங்கக்கடிதிடி உருமொடு கதழுறை சிதறிவிளிவிடன் அறியா வானுமிழ் நடுநாள்அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்பனிமயங்கு அசைவளி அலைப்பத் தந்தைநெடுநகர் ஒருசிறை நின்றனெ னாகஅறலென அவிர்வருங் கூந்தல் மலரெனவாண்முகத்து அலமரும் ஆயிதழ் மழைக்கண்முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்நகைமாண் டிலங்கு நலங்கெழு துவர்வாய்க்கோலமை விழுத்தொடி விளங்க வீசிக்காலுறு தளிரின் நடுங்கி ஆனாதுநோயசா வீட முயங்கினள் வாய்மொழிநல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளியநசைபிழைப் பறியாக் கழல்தொடி 2அதிகன்கோளறவு அறியாப் பயங்கெழு பலவின்வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலியவில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வரஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன் றருவிநேர்கொள் நெடுவரைக் கவாஅன்சூரர மகளிரிற் பெறற்கரி யோளே.
Kolakkurai pataaak koatuvalar kuttaththu / Alappari thaakiya kuvaiyirun thoanrala / Katalkan tanna maaka visumpin / Azharkoti yanna minnuvasipu nutangkak / Katithiti urumotu kathazhurai sithari / Vilivitan ariyaa vaanumizh natunaal / Arungkatik kaavalar ikazhpatham noakkip / Panimayangku asaivali alaippath thanthai / Netunakar orusirai ninrane naaka / Aralena avirvarung koonthal malarena / Vaanmukaththu alamarum aayithazh mazhaikkan / Mukainiraith thanna maaveezh venpal / Nakaimaan tilangku nalangkezhu thuvarvaayk / Koalamai vizhuththoti vilangka veesik / Kaaluru thalirin natungki aanaathu / Noayasaa veeta muyangkinal vaaymozhi / Nallisai tharooum iravalarkku ulliya / Nasaipizhaip pariyaak kazhalthoti 2athikan / Koalaravu ariyaap payangkezhu palavin / Vaengkai saerntha verpakam poliya / Vilkezhu thaanaip pasumpoon paantiyan / Kalirani velkoti katuppak kaanvara / Oliruvana izhitharum uyarnthuthoan raruvi / Naerkol netuvaraik kavaaan / Soorara makalirir perarkari yoalae.
இரவுக்குறிக்கண்தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லியது. · பரணர் பாடியது