poem 359 · Akananuru · Many poets

அகநானூறு 359 · பாலை · மாமூலனார்

பனிவார் உண்கணும் பசந்த தோளும்நனிபிறர் அறியச் சாஅய நாளுங்கரந்தனம் உறையும் நம்பண் பறியார்நீடினர் மன்னோ காதலா எனநீஎவன்கை யற்றனை இகுளை அவரேவான வரம்பன் வெளியத் தன்னநம்மாணலந் தம்மொடு கொண்டனர் முனாஅதுஅருஞ்சுரக் கவலை யசைஇய கோடியர்வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானைசூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்பொய்யா நல்லிசை மாவண் புல்லிகவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகைஅருவித் துவலையொடு மயங்கும்பெருவரை அத்தம் இயங்கி யோரே.

Panivaar unkanum pasantha thoalum / Nanipirar ariyas saaaya naalung / Karanthanam uraiyum nampan pariyaar / Neetinar mannoa kaathalaa enanee / Evankai yarranai ikulai avarae / Vaana varampan veliyath thannanam / Maanalan thammotu kontanar munaaathu / Arunjurak kavalai yasaiiya koatiyar / Veezhpiti ketuththa netunthaal yaanai / Soorpukal atukkaththu mazhaimaaru muzhangkum / Poyyaa nallisai maavan pulli / Kavaikkathir varakin yaanarp painthaal / Muthaissuval moozhkiya kaansutu kuroouppukai / Aruvith thuvalaiyotu mayangkum / Peruvarai aththam iyangki yoarae.

Share
கதை

பாலை · மாமூலனார்

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. · மாமூலனார் பாடியது