poem 10 · Akananuru · Many poets

அகநானூறு 10 · நெய்தல் · அம்மூவனார்

வான்கடற் பரப்பில் தூவற்கு கெதிரியமீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்தமுடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்புள்ளிறை கூரும் மெல்லம் புலம்பநெய்த லுண்கண் பைதல கலுழப்பிரித லெண்ணினை யாயி னன்றுமரிதுதுற் றனையாற் பெரும வுரிதினிற்கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடுகுரூஉத் திரைப் புணரி யுடைதரு மெக்கர்ப்பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டிமணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்வளங்கெழு தொண்டி யன்னவிவ ணலனே.

Vaankatar parappil thoovarku kethiriya / Meenkan tanna mellarum poozhththa / Mutavumuthir punnaith thatavunilai maassinaip / Pullirai koorum mellam pulampa / Neytha lunkan paithala kaluzhap / Piritha lenninai yaayi nanru / Marithuthur ranaiyaar peruma vurithinir / Kontaangkup peyarthal vaentung kontalotu / Kuroouth thiraip punari yutaitharu mekkarp / Pazhanthimil konra puthuvalaip parathavar / Moattumana lataikaraik koattumeen konti / Manangkamazh paakkaththup pakukkum / Valangkezhu thonti yannaviva nalanae.

Share
கதை

நெய்தல் · அம்மூவனார்

இரவுக் குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது. · அம்மூவனார் பாடியது