poem 6 · Akananuru · Many poets

அகநானூறு 6 · மருதம் · பரணர்

அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலையரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கையிழையணி பணைத்தோ ளையை தந்தைமழைவளந் தரூஉ மாவண் டித்தன்பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட்கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடுவேழ வெண்புணை தழீஇப் பூழியர்கயனா டியானையின் முகனமர்ந் தாஅங்கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழையநெருந லாடினை புனலே யின்றுவந்தாக வனமுலை யரும்பிய சுணங்கின்மாசில் கற்பின் புதல்வன் றாயென,மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்லசுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கிவாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்மிளமை சென்று தவத்தொல் லஃதேயினிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.

Aripey silampi naampalan thotalai / Yarampoa zhavvalaip polintha munkai / Yizhaiyani panaiththoa laiyai thanthai / Mazhaivalan tharoou maavan tiththan / Pinta nelli nuranthai yaangkat / Kazhainilai peraaak kaaviri neeththang / Kuzhaimaa nollizhai neevey yoalotu / Vaezha venpunai thazheeip poozhiyar / Kayanaa tiyaanaiyin mukanamarn thaaang / Kaenthezhi laakaththup poonthaar kuzhaiya / Neruna laatinai punalae yinruvan / Thaaka vanamulai yarumpiya sunangkin / Maasil karpin puthalvan raayena, / Maayap poymmozhi saayinai payirriyem / Muthumai yellalaஃ thamaikun thilla / Sutarppoon thaamarai neermuthir pazhanath / Thanthoompu vallai yaaykoti mayakki / Vaalai maeyntha valleyirru neernaay / Mullaraip pirampin mootharir seriyum / Palvaen maththi kazhaaa rannavem / Milamai senru thavaththol laஃthae / Yinimaiyevan seyvathu poymmozhi yemakkae.

Share
கதை

மருதம் · பரணர்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. · பரணர் பாடியது