poem 22 · Akananuru · Many poets

அகநானூறு 22 · குறிஞ்சி · வெறிபாடிய காமக் கண்ணியார்

அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங்கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லலிதுவென வறியா மறுவரற் பொழுதிற்படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கைநெடுவேட் பேணத் தணிகுவ ளிவளெனமுதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக்களநன் கிழைத்துக் கண்ணி சூட்டிவளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்துருவச் செந்தினை குருதியொடு தூஉய்முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாளார நாற அருவிடர்த் ததைந்தசாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கினொளித்தியங்கு மரபின் வயப்புலி போலநன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத்தந்நசை யுள்ளத்து நந்நசை வாய்ப்பவின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்துநக்கனெ னல்லனோ யானே யெய்த்தநோய்தணி காதலர் வரவீண்டேதில் வேலற் குலந்தமை கண்டே.
Share
கதை

குறிஞ்சி · வெறிபாடிய காமக் கண்ணியார்

(1) வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. · வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது