பாலை · --- கயமனார்
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. · --- கயமனார் பாடியது
வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர்தாருந் தையின தடையுந் தொடுத்தனநிலநீர் அற்ற வெம்மை நீங்கப்பெயல்நீர் தலைஇ உலவையிலை நீத்துக்குறுமுறி யீன்றன மரனே நறமலர்வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன்தேம்படப் பொதுளின பொழிலே கானமும்நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாள்போதுவந் தன்று தூதே நீயும்கலங்கா மனத்தை யாகி யென்சொல்நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவிதெற்றி உலறினும் வயலை வாடினும்நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்நின்னினும் மடவள் நனிநின் நயந்தஅன்னை அல்லல் தாங்கிநின் ஐயர்புலிமருள் செம்மல் நோக்கிவலியாய் இன்னுந் தோய்கநின் முலையே.
Vaelum vilangkina vinainjaru miyanranar / Thaarun thaiyina thataiyun thotuththana / Nilaneer arra vemmai neengkap / Peyalneer thalaii ulavaiyilai neeththuk / Kurumuri yeenrana maranae naramalar / Vaeynthana poalath thoanrip palavutan / Thaempatap pothulina pozhilae kaanamum / Naninan raakiya panineengku vazhinaal / Poathuvan thanru thoothae neeyum / Kalangkaa manaththai yaaki yensol / Nayanthanai konmoa nenjamar thakuvi / Therri ularinum vayalai vaatinum / Nossi mensinai vanarkural saayinum / Ninninum mataval naninin nayantha / Annai allal thaangkinin aiyar / Pulimarul semmal noakki / Valiyaay innun thoaykanin mulaiyae.
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. · --- கயமனார் பாடியது