பாலை · -- கழார்க் கீரனெயிற்றியார்
பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமைமீதூரச் சொல்லியது. · -- கழார்க் கீரனெயிற்றியார் பாடியது
பெய்துபுலம் திறந்த பொங்கல் வெண்மழைஎஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்னதுவலை தூவல் கழிய அகல்வயல்நீடுகழைக் கருபின் கணைக்கால் வான்பூக்கோடைப் பூளையின் வாடையொடு தயல்வரப்நீலுண் பச்சை நிறமறைத்து அடைச்சியதோலெறி பாண்டிலின் வாலிய மலரக்கோழலை அவரைக் 3கொழுமுகை அவிழஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிடப்புலந்தொறுங் 4குருகினம் நரலக் கல்லனஅகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்கஅற்சிரம் வந்தன் றமைந்தன் றிதுவெனஎப்பொருள் பெறினும் பிரியன்மி னோவெனச்செப்புவல் வாழியோ துணையுடை 5யீர்க்கெனஇணரிறுபு உடையும் நெஞ்சமொடு புணர்புவேட்டுஎயிறுதீப் பிறப்பத் திருகிநடுங்குதும் பிரியின்யாங் கடும்பனி உழந்தே.
Peythupulam thirantha pongkal venmazhai / Eஃkuru panjith thuyppat tanna / Thuvalai thooval kazhiya akalvayal / Neetukazhaik karupin kanaikkaal vaanpook / Koataip poolaiyin vaataiyotu thayalvarap / Neelun passai niramaraiththu ataissiya / Thoaleri paantilin vaaliya malarak / Koazhalai avaraik 3kozhumukai avizha / Oozhuru thoanri onpooth thalaivitap / Pulanthorung 4kurukinam naralak kallana / Akanrurai makalir anithuranthu natungka / Arsiram vanthan ramainthan rithuvena / Epporul perinum piriyanmi noavenas / Seppuval vaazhiyoa thunaiyutai 5yeerkkena / Inarirupu utaiyum nenjamotu punarpuvaettu / Eyirutheep pirappath thiruki / Natungkuthum piriyinyaang katumpani uzhanthae.
பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமைமீதூரச் சொல்லியது. · -- கழார்க் கீரனெயிற்றியார் பாடியது