குறிஞ்சி · கபிலர்
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குத் 1தலைமகள் இயற்பட மொழிந்தது. · கபிலர் பாடியது
முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானைநீர்நசை மருங்கின் 3நிறம்பார்த் தொடுங்கியபொருமரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக்குருதிச் 4செங்கோட்ட டழிதுளி கழாஅக்கன்முகை அடுக்கதது மென்மெல இயலிச்செறுபகை 6வாட்டிய செம்மலொ டறுகால்யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்துவாழையஞ் சிலம்பிற் றுஞ்சும் நாடன்நின்புரைத் தக்க சாயலன் எனநீஅன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்வாய்ந்தன வாழி தோழி வேட்டோர்க்குஅமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்வண்டிடைப் படாஅ முயக்கமும்தண்டாக் காதலும் தலை 7நாள் போன்மே.
Mulaivalar muthala moongkil murukkik / Kilaiyotu maeyntha kaezhkilar yaanai / Neernasai marungkin 3nirampaarth thotungkiya / Porumaran uzhuvai tholaissik koornunaik / Kuruthis 4sengkoatta tazhithuli kazhaaak / Kanmukai atukkathathu menmela iyalis / Serupakai 6vaattiya semmalo tarukaal / Yaazhisaip paravai imirap pitipunarnthu / Vaazhaiyanj silampir runjum naatan / Ninpuraith thakka saayalan enanee / Anpuraith thatangkak kooriya insol / Vaaynthana vaazhi thoazhi vaettoarkku / Amizhthath thanna kamazhthaar maarpin / Vantitaip pataaa muyakkamum / Thantaak kaathalum thalai 7naal poanmae.
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குத் 1தலைமகள் இயற்பட மொழிந்தது. · கபிலர் பாடியது