முல்லை · 2மதுரைக் கூத்தனார்
வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · 2மதுரைக் கூத்தனார் பாடியது
ஓடா நல்லேற் றுரிவை தைஇயஆடுகொண் முரசம் இழுமென முழங்கநாடுதிறை கொண்டன மாயின் பாகபெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்துஇரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇவணங்கிறை மகளிர் 1அயர்ந்தனர் ஆடும்கழங்குறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்பெயறொடங் கின்றால் வானம் வானின்வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்பநால்குடன் பூண்ட கானவில் புரவிக்கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராதுஇனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்துநோன்சூட் டாழி ஈர்நிலம்துமிப்பஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்பொலிவன அமர்த்த உண்கண்ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே
Oataa nallaer rurivai thaiiya / Aatukon murasam izhumena muzhangka / Naatuthirai kontana maayin paaka / Perungkalirruth thatakkai puraiyak kaalveezhththu / Irumpitith thozhuthiyin eentuvana kuzheei / Vanangkirai makalir 1ayarnthanar aatum / Kazhangkurazh aaliyotu kathazhurai sitharip / Peyarotang kinraal vaanam vaanin / Vayangkusirai annaththu niraiparai katuppa / Naalkutan poonta kaanavil puravik / Kotinji netunthaer katumpari thaviraathu / Inamayil akavung kaarkol viyanpunaththu / Noansoot taazhi eernilamthumippa / Eentae kaanak katavumathi poongkaezhp / Polivana amarththa unkan / Olipal koonthal aaysiru nuthalae
வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · 2மதுரைக் கூத்தனார் பாடியது