poem 253 · Akananuru · Many poets

அகநானூறு 253 · பாலை · நக்கீரர்

வைகல் தோறும் பசலை பாயவென்மெய்யும் பெரும்பிறி தாகின்று ஒய்யெனஅன்னையும் அமரா முகத்தினள் அலரேவாடாப் பூவிற் கொங்கர் ஓட்டிநாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்பொன்மலி 2நெடுநகர்க் கூடல் ஆடியஇன்னிசை யார்ப்பினும் பெரிதே ஈங்கியான்சிலநாள் உய்யலென் போன்மெனப் பலநினைந்துஆழல் வாழி தோழி வடாஅதுஆரிருள் நடுநாள் 3ஏரா ஒய்யப்பகைமுனை யறுத்துப் பல்லினஞ் சாஅய்க்கணஞ்சால் கோவலர் நெடுவிளிப் பயிரறிந்துஇனந்தலைத் தரூஉந் துளங்கிமில் நல்லேற்றுத்தழூஉப்பிணர் எருத்தந் தாழப் பூட்டியஅந்தூம் பகலமைக் கமஞ்செலப் பெய்ததுறுகாழ் வல்சியர் தொழுவறை வௌவிக்கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்நேரா வன்தோள் வடுகர் பெருமகன்பேரிசை எருமை நன்னாட் டுள்ளதைஅயிரியாறு இறந்தன ராயினும் மயரிறந்துகுரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின்நுசுப்பழித் தொலிவருந் தாழிருங் கூந்தல்மாக விசும்பில் திலகமொடு பதித்துதிங்கள் அன்னநின் திருமுகத்தஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே.

Vaikal thoarum pasalai paayaven / Meyyum perumpiri thaakinru oyyena / Annaiyum amaraa mukaththinal alarae / Vaataap poovir kongkar oatti / Naatupala thantha pasumpoon paantiyan / Ponmali 2netunakark kootal aatiya / Innisai yaarppinum perithae eengkiyaan / Silanaal uyyalen poanmenap palaninainthu / Aazhal vaazhi thoazhi vataaathu / Aarirul natunaal 3aeraa oyyap / Pakaimunai yaruththup pallinanj saaayk / Kananjaal koavalar netuvilip payirarinthu / Inanthalaith tharooun thulangkimil nallaerruth / Thazhoouppinar eruththan thaazhap poottiya / Anthoom pakalamaik kamanjelap peytha / Thurukaazh valsiyar thozhuvarai vauvik / Kanrutaip perunirai manrunirai tharooum / Naeraa vanthoal vatukar perumakan / Paerisai erumai nannaat tullathai / Ayiriyaaru iranthana raayinum mayariranthu / Kurumpai menmulai arumpiya sunangkin / Nusuppazhith tholivarun thaazhirung koonthal / Maaka visumpil thilakamotu pathiththu / Thingkal annanin thirumukaththa / Onsoottu avirkuzhai malaintha noakkae.

Share
கதை

பாலை · நக்கீரர்

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. · நக்கீரர் பாடியது