பாலை · நக்கீரனார்
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · நக்கீரனார் பாடியது
அம்ம வாழி தோழி பன்னாள்இவ்வூர் அம்பல் எவனோ வள்வார்விசிபிணித் தியாத்த அரிகோல் தெண்கிணைஇன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்பொன்கோட்டுச் செறித்து பொலந்தார் பூட்டிச்சாந்தம் புதைத்த 3ஏந்துதுளங் கெழிலிமில்ஏறுமுந் துறுத்துச் சால்பதங் குவைஇநெடுந்தேர் களிற்றொடு சுரக்குங் கொடும்பூட்பல்வேல் முசுண்டை வேம்பி யன்னவென்நல்லெழில் இளநலம் தொலையினும் நல்கார்பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்நாகா வீழ்த்துத் திற்றி தின்றபுலவுக்களந் துழைஇய துகள்வாய்க் கோடைநீள்வரைச் சிலம்பின் இரைவேட் டெழுந்தவாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்துவேறுவேறு கவலைய ஆறுபரிந் தலறிகழைமாய் பிறங்கன் மலையிறந் தோரே.
Amma vaazhi thoazhi pannaal / Ivvoor ampal evanoa valvaar / Visipinith thiyaaththa arikoal thenkinai / Inkural akavunar irappin naatorum / Ponkoattus seriththu polanthaar poottis / Saantham puthaiththa 3aenthuthulang kezhilimil / Aerumun thuruththus saalpathang kuvaii / Netunthaer kalirrotu surakkung kotumpoot / Palvael musuntai vaempi yannaven / Nallezhil ilanalam tholaiyinum nalkaar / Palpoong kaanaththu alkunizhal asaiith / Thoakaith thoovith thotaiththaar mazhavar / Naakaa veezhththuth thirri thinra / Pulavukkalan thuzhaiiya thukalvaayk koatai / Neelvarais silampin iraivaet tezhuntha / Vaalvari vayappuli theentiya viliseththu / Vaeruvaeru kavalaiya aaruparin thalari / Kazhaimaay pirangkan malaiyiran thoarae.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · நக்கீரனார் பாடியது