poem 73 · Akananuru · Many poets

அகநானூறு 73 · பாலை · எருமை வெளியனார்

பின்னொடு முடித்த மண்ணா முச்சிநெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇவெருகிருள் நோக்கி அன்ன கதிர் விடுபொருகாழ் முத்தம் இடைமுலை விளங்கஅணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய்நின்னோய்த் தலையையும் அல்லை தெறுவரஎன்னா குவள்கொல் அளியள் தானெனஎன்னழி பிரங்கும் நின்னொடி யானும்ஆறன் றென்னா வேறல் காட்சிஇருவேம் நம்படர் தீர வருவதுகாணிய வம்மோ காதலந் தோழிகொடிபிணங் கரில இருள்கொள் நாகம்மடிபதம் பார்க்கும் வயமான் துப்பின்ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப்பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளிவிடுபொறிச் சுடரின் மின்னிஅவர்சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

Pinnotu mutiththa mannaa mussi / Neykani veezhkuzhal akappatath thaii / Verukirul noakki anna kathir vitu / Porukaazh muththam itaimulai vilangka / Anangkuru karpotu matamkolas saaay / Ninnoayth thalaiyaiyum allai theruvara / Ennaa kuvalkol aliyal thaanena / Ennazhi pirangkum ninnoti yaanum / Aaran rennaa vaeral kaatsi / Iruvaem nampatar theera varuvathu / Kaaniya vammoa kaathalan thoazhi / Kotipinang karila irulkol naakam / Matipatham paarkkum vayamaan thuppin / Aenalanj siruthinais saenoan kaiyathaip / Pitikkai amaintha kanalvaayk kolli / Vituporis sutarin minniavar / Senra thaeeththu ninrathaal mazhaiyae.

Share
கதை

பாலை · எருமை வெளியனார்

தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான். குறித்த பருவவரவு கண்டு அழிந்த தலைமகட்குச் சொல்லியது. · எருமை வெளியனார் பாடியது