குறிஞ்சி · மதுரை நக்கீரனார்
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. · மதுரை நக்கீரனார் பாடியது
நனந்தலைக் கானத் தாளி யஞ்சிஇனந்தலைத் தரூஉ மெறுழ்கிளர் முன்பின்வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப்பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல்தேம்பிழி நறவின் குறவர் முன்றில்முந்தூ ழாய்மலர் உதிரக் காந்தள்நீடிதழ் நெடுந்துடுப் பொசியத் தண்ணெனவாடை தூக்கும் வருபனி யற்சிரம்நம்மில் புலம்பிற் றம்மூர்த் தமியர்என்னா குவர்கொல் அளியர் தாமெனஎம்விட் டகன்ற சின்னாட் சிறிதும்வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்றுசெழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டுதடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டியாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாதாளிடூஉக் கடந்து வாளமர் உழக்கிஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டியகடும்பரிப் புரவிக் கைவண் பாரிதீம்பெரும் பைஞ்சுனைப் பூத்ததேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே.
Nananthalaik kaanath thaali yanji / Inanthalaith tharoou meruzhkilar munpin / Varinjimi raarkkum vaaypuku kataaaththup / Porinuthar polintha vayakkalir roruththal / Irumpinarth thatakkaiyin aemurath thazhuvak / Katunjoon matappiti natungkunj saaral / Thaempizhi naravin kuravar munril / Munthoo zhaaymalar uthirak kaanthal / Neetithazh netunthutup posiyath thannena / Vaatai thookkum varupani yarsiram / Nammil pulampir rammoorth thamiyar / Ennaa kuvarkol aliyar thaamena / Emvit takanra sinnaat sirithum / Vaaymozhik kapilan soozhas saeyninru / Sezhunjeyn nellin vilaikathir kontu / Thatanthaal aampal malarotu kootti / Yaantupala kazhiya vaentuvayir pizhaiyaa / Thaalitoouk katanthu vaalamar uzhakki / Aenthukoat tiyaanai vaenthar oattiya / Katumparip puravik kaivan paari / Theemperum painjunaip pooththa / Thaengkamazh puthumalar naarumival nuthalae.
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. · மதுரை நக்கீரனார் பாடியது