poem 205 · Akananuru · Many poets

அகநானூறு 205 · பாலை · நக்கீரர்

செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்தையல நின்வயின் பிரியலம் யாமெனப்பொய்வல் உள்ளமொடு புரிவுணக் கூறித்துணிவில் கொள்கைய ராகி இனியேநோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூரநாம்அழத் துறந்தனர் ஆயினுந் தாமேவாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசைவளங்கெழு கோசர் விளங்குபடை நூறிநிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளிபூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க்காவிரிப் படப்பைப் பட்டினத் தன்னசெழுகர் நல்விருந் தயர்மார் ஏமுறவிழுநிதி எளிதினின் எய்துக தில்லமழைகால் அற்சிரத்து மாலிருள் நீங்கிநீடமை நிவந்த நிழல்படு சிலம்பிற்கடாஅ யானைக் கவுண்மருங் குறழஆமூர்பு இழிதரு காமர் சென்னிப்புலியுரி வரியதள் கடுப்பக் கலிசிறந்துநாட்பூ வேங்கை நறுமலர் உதிரமேக்கெழு பெருஞ்சினை யேறிக் கணக்கலைகூப்பிடூஉ உகளுங் குன்றகச் சிறுநெறிக்கற்பிறங்க ஆரிடை விலங்கியசொற்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே.

Seyirtheer nenjamotu serinthoar poalath / Thaiyala ninvayin piriyalam yaamenap / Poyval ullamotu purivunak koorith / Thunivil kolkaiya raaki iniyae / Noaymali varuththamotu nuthalpasap poora / Naamazhath thuranthanar aayinun thaamae / Vaaymozhi nilaiiya saenvilangku nallisai / Valangkezhu koasar vilangkupatai noori / Nilangkola veஃkiya polampoon killi / Pooviri netungkazhi naappan perumpeyark / Kaavirip patappaip pattinath thanna / Sezhukar nalvirun thayarmaar aemura / Vizhunithi elithinin eythuka thilla / Mazhaikaal arsiraththu maalirul neengki / Neetamai nivantha nizhalpatu silampir / Kataaa yaanaik kavunmarung kurazha / Aamoorpu izhitharu kaamar sennip / Puliyuri variyathal katuppak kalisiranthu / Naatpoo vaengkai narumalar uthira / Maekkezhu perunjinai yaerik kanakkalai / Kooppitoou ukalung kunrakas sirunerik / Karpirangka aaritai vilangkiya / Sorpeyar thaeeththa suraniran thoarae.

Share
கதை

பாலை · நக்கீரர்

தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச்சொல்லியது. · நக்கீரர் பாடியது