poem 203 · Akananuru · Many poets

அகநானூறு 203 · பாலை · கபிலர்

யாயறிந் துணர என்னார் தீவாய்அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர்இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள்எனக்குவந் துரைப்பவுந் தனக்குரைப் பறியேன்நாணுவள் இவளென நனிகரந் துறையும்யானில் வறுமனை யொழித் தானேஅன்னை யறியின் இவணுறை வாழ்க்கைஎனக்கெளி தாகல் இல்லெனக் கழற்கால்மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்பன்மலை யருஞ்சுரம் போகிய தனக்கியான்அன்னேன் அன்மை நன்வா யாகமானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறிவெய்திடை யுறாஅ தெய்தி முன்னர்ப்புல்லென் மாமலைப் புலம்புகொள்சீறூர்ச்செல்விருந் தாற்றித் துச்சி லிருத்தநுனைகுழைத் தலமரு நொச்சிமனைகெழு பெண்டியான் ஆகுக மன்னே.

Yaayarin thunara ennaar theevaay / Alarvinai maeval ampal pentir / Innal inaiyalnin makalenap pannaal / Enakkuvan thuraippavun thanakkuraip pariyaen / Naanuval ivalena nanikaran thuraiyum / Yaanil varumanai yozhith thaanae / Annai yariyin ivanurai vaazhkkai / Enakkeli thaakal illenak kazharkaal / Minnolir netuvael ilaiyoan munnurap / Panmalai yarunjuram poakiya thanakkiyaan / Annaen anmai nanvaa yaaka / Maanathar mayangkiya malaimuthar siruneri / Veythitai yuraaa theythi munnarp / Pullen maamalaip pulampukolseeroors / Selvirun thaarrith thussi liruththa / Nunaikuzhaith thalamaru nossi / Manaikezhu pentiyaan aakuka mannae.

Share
கதை

பாலை · கபிலர்

மகட் போக்கிய 1தாய்சொல்லியது. · கபிலர் பாடியது