பாலை · மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. · மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது
சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்பெயலுறு மலரிற் கண்பனி வாரஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்துநீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கைஅடுமுரண் தொலைத்த நெடுநல் யானைமையலங் கடா அஞ் செருக்கி மதஞ்சிறந்துஇயங்குநர்ச் செகுக்கும் எய்பட நனந்தலைப்பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்கடவுள் போகிய கருந்தாட் கந்தத்துஇரும்புறாப் பெடையொடு பயிரும்பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே.
Sirunuthal pasanthu perunthoal saaay / Akalezhil alkul avvari vaatap / Pakalung kangkulum mayangkip paiyenap / Peyaluru malarir kanpani vaara / Eengkival uzhakkum ennaathu vinainayanthu / Neengkal ollumoa aiya vaengkai / Atumuran tholaiththa netunal yaanai / Maiyalang kataa anj serukki mathanjiranthu / Iyangkunars sekukkum eypata nananthalaip / Perungkai enkinam kurumpi thaerum / Purrutais suvara puthalivar pothiyir / Katavul poakiya karunthaat kanthaththu / Irumpuraap petaiyotu payirum / Perungkal vaippin malaimutha laarae.
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. · மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது