முல்லை · 1ஒக்கூர் மாசாத்தியார்
வினைமுற்றிய தலைமகன் வரவுகண்டு உழையர் சொல்லியது. · 1ஒக்கூர் மாசாத்தியார் பாடியது
இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறுநனியறிந் தன்றோ இலனே தாஅய்முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற்கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇஇழிமின் என்றநின் மொழிமருண் டிசினேவான்வழங் கியற்கை வளிபூட் டினையோமானுரு வாகநின் மனம்பூட் டினையோவரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கிமனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகைவிருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே.
Iruntha vaenthan arunthozhil mutiththenap / Purintha kaathalotu perunthaer yaanum / Aeriya tharinthan rallathu vanthavaaru / Naniyarin thanroa ilanae thaaay / Muyarparazh ukalum mullaiyam puravir / Kavaikkathir varakin seeroor aangkan / Melliyal arivai ilvayin nireei / Izhimin enranin mozhimarun tisinae / Vaanvazhang kiyarkai valipoot tinaiyoa / Maanuru vaakanin manampoot tinaiyoa / Varaimarul maarpin nalippanan muyangki / Manaikkontu pukkanan netunthakai / Virunthaer perranal thirunthizhai yoalae.
வினைமுற்றிய தலைமகன் வரவுகண்டு உழையர் சொல்லியது. · 1ஒக்கூர் மாசாத்தியார் பாடியது