poem 155 · Akananuru · Many poets

அகநானூறு 155 · பாலை · பாலைபாடிய பெருங் கடுங்கோ

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்பொருளின் ஆகும் புனையிழை என்றுநம்இருளேர் ஐம்பால் நீவி யோரேநோய்நாம் உழக்குவ மாயினுந் தாந்தம்செய்வினை முடிக்க தோழி பல்வயின்பயநிரை சேர்ந்த பாணாட் டாங்கண்நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டியகொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழிநீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாதுபெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலிஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழிசெயிர்தீர் நாவின் வயிரியர் பின்றைமண்ணார் முழவின் கண்ணகத்து அசைத்தவிரலூன்று வடுவில்மரல்வாடு மருங்கின் மலையிறந் தோரே.

Arankataip pataaa vaazhkkaiyum enrum / Piran katais selaaas selvamum irantum / Porulin aakum punaiyizhai enrunam / Irulaer aimpaal neevi yoarae / Noaynaam uzhakkuva maayinun thaantham / Seyvinai mutikka thoazhi palvayin / Payanirai saerntha paanaat taangkan / Netuvilik koavalar kooval thoantiya / Kotuvaayp paththal vaarnthuku sirukuzhi / Neerkaay varuththamotu saervitam peraathu / Perungkaliru mithiththa atiyakaththu irumpuli / Othungkuvana kazhintha sethumpal eervazhi / Seyirtheer naavin vayiriyar pinrai / Mannaar muzhavin kannakaththu asaiththa / Viraloonru vatuvil / Maralvaatu marungkin malaiyiran thoarae.

Share
கதை

பாலை · பாலைபாடிய பெருங் கடுங்கோ

தலைமகன் பிரிவின் கண்வேறுபட்ட தலைமகள் சொல்லியது. · பாலைபாடிய பெருங் கடுங்கோ பாடியது