poem 294 · Akananuru · Many poets

அகநானூறு 294 · முல்லை · கழார்க்கீர னெயிற்றியார்

மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்துள்ளுப்பெயல் 1கழிந்த பின்றைப் புகையுறப்புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக்காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத்துயத்தலைப் பூவின் புதலிவர் ஈங்கைநெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளிர்இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வரஅவரைப் பைம்பூப் பயில அகல்வயற்கதிர்வார் காய்நெல் கட்கினிது இறைஞ்சச்சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்காய்சின வேந்தன் பாசறை நீடிநந்நோய் அறியா அறனி லாளர்இந்நிலை களைய வருகுவர் கொல்லெனஆனா தெறிதரும் வாடையொடுநோனேன் தோழியென் 3தனிமை யானே.

Mangkul maamazhai vinnathirpu muzhangkith / Thulluppeyal 1kazhintha pinraip pukaiyurap / Pullinun thuvalai poovakam niraiyak / Kaathalarp pirintha kaiyaru makalir / Neervaar kannir karuvilai malarath / Thuyaththalaip poovin puthalivar eengkai / Neyththoayth thanna neernanai yanthalir / Iruvakir eerulin eeriya thuyalvara / Avaraip paimpoop payila akalvayar / Kathirvaar kaaynel katkinithu irainjas / Sitharsinai thoongkum arsira arainaal / Kaaysina vaenthan paasarai neeti / Nannoay ariyaa arani laalar / Innilai kalaiya varukuvar kollena / Aanaa theritharum vaataiyotu / Noanaen thoazhiyen 3thanimai yaanae.

Share
கதை

முல்லை · கழார்க்கீர னெயிற்றியார்

பருவவரவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · கழார்க்கீர னெயிற்றியார் பாடியது