poem 183 · Purananuru · Many poets

புறநானூறு 183 · கற்கை நன்றே · ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

Urruzhi uthaviyum, uruporul kotuththum, / Pirrainilai muniyaathu, karral nanrae! / Pirappu oar anna utanvayirru ullum, / Sirappin paalaal, thaayum manam thiriyum; / Orukutip pirantha palloa rullum, / ‘mooththoan varuka’ ennaathu, avarul / Arivutai yoan aaru arasum sellum; / Vaerrumai therintha naarpaal ullum, / Keezhppaal oruvan karpin, / Maerpaal oruvanum avankan patumae,

Share
கதை

கற்கை நன்றே · ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

திணை: பொதுவியல் · துறை: பொருண்மொழிக் காஞ்சி