poem 53 · Purananuru · Many poets

புறநானூறு 53 · செந்நாவும் சேரன் புகழும் · பொருந்தில் இளங்கீரனார்

முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்றகளங்கொள் யானைக், கடுமான், பொறைய!விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலைகைம்முற் றலநின் புகழே, என்றும்;ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்துவாழேம் என்றலும் அரிதே; ‘தாழாதுசெறுத்த செய்யுள் செய்செந் நாவின்,வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.

Muthirvaar ippi muththa vaar manal, / Kathirvitu maniyin kanporu maataththu, / Ilangku valai makalir therri aatum / Vilangku seer vilangkil vizhumam konra / Kalangkol yaanaik, katumaan, poraiya! / Virippin akalum; thokuppin enjum; / Mammar nenjaththu emmanoarkku oruthalai / Kaimmur ralanin pukazhae, enrum; / Oliyoar piranthaim malarthalai ulakaththu / Vaazhaem enralum arithae; ‘thaazhaathu / Seruththa seyyul seysen naavin, / Veruththa kaelvi, vilangkupukazhk kapilan / Inrulan aayin, nanruman, enra nin / Aatu kol varisaikku oppap / Paatuvan mannaal, pakaivaraik katappae.

Share
கதை

செந்நாவும் சேரன் புகழும் · பொருந்தில் இளங்கீரனார்

திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை · குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி