song 106 · Kalithogai · Five poets

கலித்தொகை 106 · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி,ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்,வழூஉ சொல் கோவலர், தம் தம் இன நிரைபொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்.அவ் வழிநீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்த்துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல - களம் புகும்மள்ளர் வனப்பு ஒத்தன.தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும்,வை வாய் மருப்பினால் மாறாது குத்தலின்,மெய் வார் குருதிய ஏறு எல்லாம் - பெய் காலைக்கொண்டல் நிரை ஒத்தன.அவ் ஏற்றைபிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,இரு திறனா நீக்கும் பொதுவர் -உரு கெழு மா நிலம் இயற்றுவான்,விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு - ஒத்தனர்.அவரைக் கழல உழக்கி, எதிர் சென்று சாடி,அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலைமரத்தைப் போல் தொட்டன - ஏறு.தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரித்தங்கார் - பொதுவர் - கடலுள் பரதவர்அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு.ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்டமாலை போல், தூங்கும் சினை.ஆங்கு,தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர்இன்புற்று அயர்வர், தழூஉ.முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்;முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம் -கொலை ஏறு சாடிய புண்ணை - எம் கேளே!பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்புல்லல் எம் தோளிற்கு அணியோ! எம் கேளே!ஆங்கு, போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்காரிகை தோள் காமுறுதலும் இவ் இரண்டும்ஓராங்குச் சேறல் இலவோ? - எம் கேளே!'கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன்' என்று ஊரார்சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்செல்வம் எம் கேள்வன் தருமோ? - எம் கேளே!ஆங்க,அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச்,சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு,மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே!

Kazhuvotu sutu patai surukkiya thoal kan. / Imizh isai mantai uriyotu thookki, / Ozhukiya konraith theem kuzhal murarsiyar, / Vazhoou sol koavalar, tham tham ina nirai / Pozhuthotu thoanriya kaar nanai viyan pulaththaar. / Av vazhi / Neeru etuppavai, nilam saatupavai, / Maaru aerrus silaippavai, mantip paaypavaiyaayth / Thulangku imil nal aerru inam pala - kalam pukum / Mallar vanappu oththana. / Thaakkupu tham ul peyarththu orri, ev vaayum, / Vai vaay maruppinaal maaraathu kuththalin, / Mey vaar kuruthiya aeru ellaam - pey kaalaik / Kontal nirai oththana. / Av aerrai / Pirivu kontu, itaip poakki, inaththoatu punaththu aerri, / Iru thiranaa neekkum pothuvar - / Uru kezhu maa nilam iyarruvaan, / Viri thirai neekkuvaan, viyan kurippu - oththanar. / Avaraik kazhala uzhakki, ethir senru saati, / Azhal vaay maruppinaal kuththi, uzhalai / Maraththaip poal thottana - aeru. / Thotta tham, pun vaar kuruthiyaal kai pisainthu, mey thimirith / Thangkaar - pothuvar - katalul parathavar / Ampi oornthaangku, oornthaar, aeru. / Aeru tham koalam sey maruppinaal thoantiya varik kutar / Njaalam kontu ezhooum parunthin vaay vazheei, / Aalum katampum animaar vilangkitta / Maalai poal, thoongkum sinai. / Aangku, / Tham pula aeru paraththara uyththa tham / Anpu uru kaathalar kai pinainthu, aayssiyar / Inpurru ayarvar, thazhoou. / Muyangkip pothivaem; muyangkip pothivaem; / Mulai vaethin orri muyangkip pothivaem - / Kolai aeru saatiya punnai - em kaelae! / Pal oozh thayir kataiyath thaaaya pulli mael / Kol aeru kontaan kuruthi mayakkurap / Pullal em thoalirku aniyoa! em kaelae! / Aangku, poar aerru arum thalai anjalum aayssiyar / Kaarikai thoal kaamuruthalum iv irantum / Oaraangkus saeral ilavoa? - em kaelae! / 'kol aeru kontaan ival kaelvan' enru ooraar / Sollum sol kaelaa, alai maari yaam varum / Selvam em kaelvan tharumoa? - em kaelae! / Aangka, / Arum thalai aerrotu kaathalarp paenis, / Surumpu imir kaanam naam paatinam paravuthum; / Aerravar pulam ketath thirai kontu, / Maarraaraik katakka, em maram kezhu koavae!

Share
கதை

முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

நான்காவது பகுதி · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன் பாடியது