song 108 · Kalithogai · Five poets

கலித்தொகை 108 · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி,நுதல், அடி, நுசுப்பு என மூ வழி சிறுகிக்,கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து பெயரும்கால்,'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்டஇகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்?அஃது அவலம் அன்று மன;ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்ஞாயிற்றுப் புத்தேள் மகன்?அதனால் வாய்வாளேன்;முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்னபல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண் கண்ணும்,'நல்லேன், யான்,' என்று, நலம் தகை நம்பியசொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?சொல்லாதி;'நின்னை தகைத்தனென்,' அல்லல் காண்மன்.மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,கண்ட பொழுதே கடவரைப் போல, நீபண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நின்கொண்டது எவன் - எல்லா! - யான்?கொண்டது;அளை மாறிப் பெயர் தருவாய்! - அறிதியோ? - அஞ்ஞான்றுதளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா, என் நெஞ்சம்களமாக் கொண்டு ஆண்டாய், ஓர் கள்வியை அல்லையோ?நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்புனத்து உளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ?இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ?தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?அனைத்து ஆகவெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி,அண்ண அணித்து ஊர் ஆயின், நன்பகல் போழ்து ஆயின்,கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மைமயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்னவெயிலொடு, எவன், விரைந்து சேறி? உது காண்.பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின்தடி கண் புரையும் குறும் சுனை ஆடிப்,பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத்,தனிக் காயாம் தண் பொழில், எம்மொடு வைகிப்,பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு.இனிச் செல்வேம் யாம்;மா மருண்டன்ன மழைக் கண் சி(ற்)று ஆய்த்தியர்நீ மருட்டும் சொல்க் கண் மருள்வார்க்கு உரை, அவை;ஆ முனியா ஏறு போல் வைகல், பதின்மரைக்காமுற்றுச் செல்வாய்; ஓர் கண் குத்தி கள்வனை;நீ எவன் செய்தி, பிறர்க்கு?யாம் எவன் செய்தும், நினக்கு?கொலை உண் கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி,இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்தலையினால் தொட்டு உற்றேன், சூள்.ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் -தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை,ஆம்பல் குழலால் பயிர் பயிர் - எம் படப்பைக்காஞ்சிக் கீழ் செய்தேம் குறி.

Ikal vaenthan saenai iruththa vaay poala - / Akal alkul thoal kan ena moo vazhip peruki, / Nuthal, ati, nusuppu ena moo vazhi sirukik, / Kavalaiyaal kaamanum patai vitu vanappinoatu, / Akal aangkan alai maari, alamanthu peyarumkaal, / 'nakai vallaen yaan' enru en uyiroatu patai thotta / Ikalaatti! ninnai evan pizhaiththaen, ellaa! yaan? / Aஃthu avalam anru mana; / Aayar emar aanaal aayththiyaem yaam mikak; / Kaayaam poom kannik karum thuvar aataiyai, / Maeyum nirai munnark koal oonri ninraay, oar / Aayanai allai; piravoa amarar ul / Njaayirrup puththael makan? / Athanaal vaayvaalaen; / Mullai mukaiyum murunthum niraiththanna / Pallum panaith thoalum paer amar un kannum, / 'nallaen, yaan,' enru, nalam thakai nampiya / Sollaatti! ninnotu sol aarrukirpaar yaar? / Sollaathi; / 'ninnai thakaiththanen,' allal kaanman. / Mantaatha koori, mazha kuzhakku aakinrae, / Kanta pozhuthae katavaraip poala, nee / Pantam vinaaya patirraal thoteeiya, nin / Kontathu evan - ellaa! - yaan? / Kontathu; / Alai maarip peyar tharuvaay! - arithiyoa? - anjnjaanru / Thalava malar thathainthathu oar kaanas sirraarru ayal, / Ila maangkaay poazhnthanna kanninaa, en nenjam / Kalamaak kontu aantaay, oar kalviyai allaiyoa? / Nin nenjam kalamaak kontu yaam aalal emakku evan elithu aakum / Punaththu ulaan ennaikkup pukaa uyththuk kotuppathoa? / Inaththu ulaan enthaikkuk kalaththotu selvathoa? / Thinaik kaalul yaay vitta kanru maeykkirpathoa? / Anaiththu aaka / Venneyth thezhi kaetkum anmaiyaal, saeyththu anri, / Anna aniththu oor aayin, nanpakal poazhthu aayin, / Kan noakku ozhikkum kavin peru pen neermai / Mayil eruththu vannaththu maayoay! marru inna / Veyilotu, evan, virainthu saeri? uthu kaan. / Piti thunju anna arai maela, nungkin / Thati kan puraiyum kurum sunai aatip, / Panip poom thalavotu mullai pariththuth, / Thanik kaayaam than pozhil, emmotu vaikip, / Panip patas selvaay, num oorkku. / Inis selvaem yaam; / Maa maruntanna mazhaik kan si(r)ru aayththiyar / Nee maruttum solk kan marulvaarkku urai, avai; / Aa muniyaa aeru poal vaikal, pathinmaraik / Kaamurrus selvaay; oar kan kuththi kalvanai; / Nee evan seythi, pirarkku? / Yaam evan seythum, ninakku? / Kolai un kan koor eyirruk koy thalir maeni, / Inai vanappin, maayoay! ninnin siranthaar / Nila ulakaththu inmai theli; nee varuthi; / Malaiyotu maarpu amaintha selvan atiyaith / Thalaiyinaal thottu urraen, sool. / Aangku unaraar naerpa; athu poyppaay nee; aayin - / Thaem kol poruppan sirukuti em aayar / Vaenthu oottu aravaththu, nin pentir kaanaamai, / Kaanjith thaathu ukkanna thaathu eru manraththuth / Thoongkum kuravaiyuul nin pentir kaelaamai, / Aampal kuzhalaal payir payir - em patappaik / Kaanjik keezh seythaem kuri.

Share
கதை

முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

நான்காவது பகுதி · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன் பாடியது