புண்ணுமிழ் குருதி
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு
வரைமருள் புணரி வான்பிசிர் உடையவளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னிஅணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்பஅருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின்மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்துமனாலக் கலவை போல அரண்கொன்றுமுரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலைபலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்கடியுடை முழுமுதல் துமிய வேஎய்வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்நாரரி நறவின் ஆர மார்பின்போர்அடு தானைச் சேர லாதமார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமேகவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரிபரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்தென்னம் குமரியொ(டு) ஆயிடைமன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு