நான்கு பால்கள், ஒரு வழி
தமிழ் நீதி நூல்கள் வாழ்வைப் பால்களாகப் பிரிக்கின்றன. திருக்குறள் அறம், பொருள், காமம் என்று மூன்று பால்கள்; இன்னிலை அவற்றோடு வீடு பேற்றையும் சேர்த்து நான்காக்குகிறது. அறம் இல்லாத பொருள் தீது; பொருள் இல்லாத இன்பம் நிலைக்காது; இன்பத்தில் மயங்கினால் வீடு இல்லை.
இந்நூலின் பாடல்கள் இந்த நான்கையும் ஒன்றோடொன்று இணைத்தே பேசுகின்றன. சில இடங்களில் மிகக் கடினமான நடை; சில இடங்களில் எளிய உவமை. படிக்கப் படிக்கத் தெளியும் நூல் இது.
மூல ஏட்டில் பொருட்பால் தலைப்பு மட்டும் விடுபட்டிருந்தாலும், பாடல்களின் வரிசையால் அதன் எல்லை தெளிவாகிறது: பத்து முதல் பத்தொன்பது வரை.