அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இளமையில் உலக இன்பங்களில் மூழ்கி உடலும் உள்ளமும் நலிந்தார். மனம் உடைந்த நிலையில் அண்ணாமலையார் கோயில் கோபுரத்திலிருந்து அவர் விழுந்தபோது முருகப்பெருமானே அவரைத் தாங்கிக் காத்தார் என்பது மரபு. இறைவன் அவருக்கு ஜபமாலை அளித்து, "முத்தைத்தரு" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்.
அன்று முதல் அவர் முருகன் தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் பாடினார். பதினாறாயிரம் பாடல்கள் என்று மரபு சொல்கிறது; இன்று சுமார் 1300 கிடைக்கின்றன. சந்த நயமும் தாளக் கட்டும் நிறைந்த அவர் பாடல்கள் இன்றும் கோயில்களிலும் இசை மேடைகளிலும் ஒலிக்கின்றன.
கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, முருகனின் வேல், மயில், சேவல் மீதான விருத்தங்கள் ஆகியவையும் அவர் அருளியவை. இவற்றுள் இங்கே படிக்கக் கிடைப்பவை கீழே உள்ளன.