திருமழிசை ஆழ்வார் இளமையில் சமண, பெளத்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர். பின்னர் திருமாலின் அருளால் ஆழ்வாராக மாறினார். இவரது வாதத் திறமையும் அறிவும் பாடல்களில் தெரிகின்றன.
திருச்சந்த விருத்தம் நூற்று இருபது பாடல்களில் இறைவனின் வல்லமையைப் பாடுகிறது. வேதத்தின் பொருளையே தமிழில் சொல்வது இந்நூலின் நோக்கம்.