திருப்பாண ஆழ்வார் திருவரங்கத்தில் காவிரிக் கரையில் நின்று ரங்கனைத் தரிசிக்க ஏங்கியவர். கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையில், அவரது ஏக்கமே பாடலாக மாறியது.
அமலனாதிபிரான் பத்துப் பாடல்களில் திருவடியிலிருந்து திருமுகம் வரை ஒவ்வொரு அங்கமாகக் கண்டு பாடுகிறார். நாலாயிரத்தின் குறுகிய பிரபந்தங்களுள் ஒன்று.