மதுரகவி ஆழ்வார் வடக்கிலிருந்து தெற்கே வந்து, ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரைக் கண்டு அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின் அருளே தனக்கு இறைவன் என்று பாடினார்.
கண்ணி நுண் சிறுத்தாம்பு பதினொரு பாடல்களில் குருவையே பாடுகிறது. நாலாயிரத்தில் மற்ற எல்லாப் பாடல்களும் இறைவனைப் பாட, இந்நூல் மட்டும் குருவைப் பாடுகிறது.