சான்றோர் மெய்ம்மறை
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு
நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின்அளப்பரி யையேநாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்ஐந்(து)ஒருங்கு புணர்ந்த விளக்கத்(து) அனையைபோர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடுதுப்புத்துறை போகிய துணி(வு)உடை யாண்மைஅக்குரன் அனைய கைவண் மையையேஅமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்போர்பீ(டு) அழித்த செருப்புகல் முன்பகூற்றுவெகுண்டு வரினும் ஆற்றுமாற் றலையேஎழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துநோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறைவான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்வயங்(கு)இழை கரந்த வண்டுபடு கதுப்பின்ஒடுங்(கு)ஈர் ஓதிக் கொடுங்குழை கணவபலகளிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்படைஏர் உழவ பாடினி வேந்தேஇலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்கடல்அக வரைப்பின்இப் பொழில்முழு(து) ஆண்டநின்முன்திணை முதல்வர் போல நின்றுநீகெடாஅ நல்லிசை நிலைஇத்தவாஅ லியரோஇவ் வுலகமோ(டு) உடனே.
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு