மறம்வீங்கு பல்புகழ்
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு
வயவர் வீழ வாளரின் மயக்கிஇடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தேதார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்அரிமான் வழங்கும் சாரல் பிறமான்தோடுகொள் இனநிரை நெஞ்(சு)அதிர்ந் தாங்குமுரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாதுமாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்கேட்டற்(கு) இனிதுநின் செல்வம் கேள்தொறும்காண்டல் விருப்பொடு கமழும் குளவிவாடாப் பைம்மயிர் இளைய வாடுநடைஅண்ணல் மழகளி(று) அரிஞிமி(று) ஓப்பும்கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்திவந்(து)அவண் நிறுத்த இரும்பேர் ஒக்கல்தொல்பசி உழந்த பழங்கண் வீழஎஃகுபோழ்ந்(து) அறுத்த வாள்நிணக் கொழுங்குறைமைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறுநனைஅமை கள்ளின் தேறலொடு மாந்திநீர்ப்படு பருந்தின் இருஞ்சிற(கு) அன்னநிலத்தின் சிதாஅர் களைந்த பின்றைநூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇவணர்இரும் கதுப்பின் வாங்(கு)அமை மென்தோள்வசைஇல் மகளிர் வயங்(கு)இழை அணியஅமர்புமெய் ஆர்த்த சுற்றமொடுநுகர்தற்(கு) இனிதுநின் பெரும்கலி மகிழ்வே.
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு