பாடல் 15 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 15 · நிரைய வெள்ளம்

யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்துமுனைஎரி பரப்பிய துன்னரும் சீற்றமொடுமழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கிநிரை களிறுஒழுகிய நிரைய வெள்ளம்பரந்(து)ஆடு கழங்(கு)அழி மன்மருங்(கு) அறுப்பக்கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொரஅழல்கவர் மருங்கின் உருஅறக் கெடுத்துத்தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல்சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்அறியா மையான் மறந்துதுப்(பு) எதிர்ந்தநின்பகைவர் நாடும் கண்டுவந் திசினேகடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டுவிழ(வு)அறு(பு) அறியா முழ(வு)இமிழ் மூதூர்க்கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்துச்சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின்வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கைதார்அணிந்(து) எழிலிய தொடிசிதை மருப்பின்போர்வல் யானைச் சேர லாதநீவா ழியர்இவ் வுலகத் தோர்க்(கு)எனஉண்(டு)உரை மாறிய மழலை நாவின்மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்தவெய்துற(வு) அறியாது நந்திய வாழ்க்கைச்செய்த மேவல் அமர்ந்த சுற்றமோ(டு)ஒன்றுமொழிந்(து) அடங்கிய கொள்கை என்றும்பதிபிழைப்(பு) அறியாது துய்த்தல் எய்திநிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்நீபுறந் தருதலின் நோய்இகந்(து) ஒ஡ணஇயயாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்(கு) எஞ்சா(து)ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்புரைவயின் புரைவயின் பொ஢ய நல்கிஏமம் ஆகிய சீர்கெழு விழவின்நெடியோன் அன்ன நல்இசைஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே.
பகிர்
கதை

நிரைய வெள்ளம்

இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு